கர்ப்பிணி பெண்களுக்கு 3,000 பவுண்ட் நிதியுதவி வழங்க முடிவு? பிரித்தானிய அரசு விரைவில் அறிவிப்பு

பிரித்தானிய நாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு ஆகும் சுமார் 3,000 பவுண்ட் மதிப்பிலான மருத்துவ செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் ஒரு புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இங்கிலாந்தில் உள்ள சேர்ந்த தேசிய மகப்பேறு மறுஆய்வு குழு கர்ப்பிணி பெண்களுக்கு ஆகும் மருத்துவ செலவுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதில், 10-ல் 9 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொள்வதும், இதற்காக சராசரியாக சுமார் 3,000 பவுண்ட் வரை செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள பெண்கள் கர்ப்பம் தரித்த மாதம் முதல் பிரசவம் பார்த்து, குழந்தைக்கு பாலூட்டும் வரை செலவிடப்படும் தொகையை மதிப்பிட்டுள்ளது.

 இதன் மூலம், கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையில் உரிய சிகிச்சை மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் 3,000 பவுண்ட் ஒதுக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிதியானது கர்ப்பிணி பெண்களுக்கு நேரடியாக செல்லாமல், NHS எனப்படும் தேசிய மருத்துவமனைகள் மூலம் செலவிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், கர்ப்பிணி பெண்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புகிறார்களோ 

அதே மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்குரிய 3,000 பவுண்ட் செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளது. தேசிய மகப்பேறு மறுஆய்வு குழுவின் இந்த பரிந்துரை தொடர்பாக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.