சுவிட்சர்லாந்து நாட்டில் இசை பயில வந்த 7 வயது சிறுமிக்கு கொடூரமான பாலியல் சித்ரவதை அளித்த ஆசிரியருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள Limmattaler என்ற பகுதியில் இசைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.
இந்த பள்ளியில் தென் அமெரிக்க பூர்வீகம் கொண்ட 55 வயதான ஒருவர் ஆசிரியராக இருந்துள்ளார். இப்பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு இசையை கற்றுக்கொடுப்பதுடன், ஓய்வு நேரங்களில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வீட்டிலேயே இசையை கற்று கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியரிடம் 7 வயது சிறுமி ஒருவர் இசை பயில வந்துள்ளார். சிறுமியின் அழகில் மயங்கிய ஆசிரியர் அவரை பலாத்காரம் செய்ய காத்திருந்துள்ளார். இதுபோன்ற தருணத்தில் சிறுமியின் வீட்டிற்கு சென்று இசை கற்றுக்கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வீட்டிற்கு சென்ற ஆசிரியர் சிறுமியின் தாயாருடன் உற்சாகமாக பழகியுள்ளார். தாயாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவருக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக்கொடுத்து தூங்க வைத்து விட்டு சிறுமி இருந்த அறைக்கு சென்றுள்ளார். ‘ஆசிரியர் தனக்கு இசையை தான் கற்றுக்கொடுக்க வந்துள்ளார்’ என நினைத்த சிறுமி அதற்காக தயார் ஆகியுள்ளார். ஆனால், தனிமையை பயன்படுத்திக்கொண்ட ஆசிரியர் விரைவாக சென்று, சிறுமியை மிரட்டி அவரது ஆடைகளை நீக்கி நிர்வாணப்படுத்தியுள்ளார்.
பின்னர், சிறுமியின் நிர்வாண உடலை இசைக்கருவியாக பாவித்து தனது மடியில் கிடத்தி பல அத்துமீறல்களை புரிந்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 2013ம் ஆண்டு ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிசாரின் பாதுகாப்பில் விசாரணையில் இருந்துள்ளார். இந்நிலையில், 2013ம் ஆண்டு ஆசிரியர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுருந்தபோது, அங்கு வந்த 6 மற்றும் 8 வயது சிறுமிகளின் நிர்வாண கோலத்தை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்த விவகாரமும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, கண்ணியம் காக்க வேண்டிய ஆசிரியர் மாணவிகளிடம் இவ்வாறு நடந்துக்கொண்டது கடும் கண்டனதிற்குரியது. எனவே, குற்றம் செய்த ஆசிரியருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5,000 பிராங்க் அபராதமும் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.