எனக்கு பாலியல் தொடர்பு என்றால் என்னவென்று தெரியாது. நான் இரவு வேளையில் துாங்கிக் கொண்டு இருக்கும் போது அத்தான் என்னைக் கட்டிப் பிடித்து என்னவோ செய்வார்.
ஆனால் அதனால் எனக்கு கர்ப்பமாக வரும் என நினைக்கவில்லை என பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளாள் 15 வயது மாணவி. இச் சம்பவம் அம்பேவகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது சகோதரியை தனது கணவர் கற்பழித்துவிட்டார் என்று இளம் குடும்பப் பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் 26 வயதான கணவனைக் கைது செய்ததுடன் கற்பழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட மாணவியையும் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். அந்த வேளையிலே மாணவி இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
