மெக்சிகோ நாட்டில் Tenancingo எனும் கிராமத்தில் 12 வயதில் காதல் வயப்பட்டவர். 20 வயதுக்கு மேலான தன் காதலன் தன்னை உயிருக்குயிராக காதலிப்பதாக Karla நம்பினார். அவரோடு ஓடிப்போனார்.
அதன்பின்னர்தான் தெரிந்தது. தன் காதலன் உண்மையான காதலன் அல்ல, அவன் குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு அயோக்கியன் என்று.
தான் மாட்டிகொண்டோம் என்று தெரிந்தாலும் தப்பிக்க வழியில்லை. அமெரிக்காவுக்கு கடத்திவரப்பட்ட Karla, அமெரிக்காவின் New York, Los Angeles, Atlanta and Miami என்று பல்வேறு நகரங்களின் விபச்சார விடுதிகளில் விபச்சராம் செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.
CNN க்கு வழங்கிய பேட்டியில் கூறும்போது, காலை 10 மணிக்கு வேலையை துவங்கினால் நள்ளிரவு ஆகிவிடும். தினமும் குறைந்தது 30 ஆண்களோடு, வாரம் 7 நாட்கள், தொடர்ந்து நான்கு ஆண்டுகள் – ஆக மொத்தம் குறைந்தது சுமார் 43,200 தடவைகள் வன்புணர்வுசெய்யப்பட்டார்; பாலியல் பலாத்காரம் செய்தனர். நான் அழுவதை பார்த்து சில ஆண்கள் சிரிப்பார்கள். நான் என் கண்ணை மூடிக் கொள்வேன். அந்த ஆண்கள் என்னிடம் நடந்து கொள்வதை பார்க்காமல் இருக்க கண்களை மூடிக் கொள்வேன். ஒரு வாடிக்கையாளர் என் கழுத்தில் முத்தமிட்டு கடிக்கையில் அவரது பல் பதிந்துவிட்டது.
இதை பார்த்து என்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் ஆத்திரம் அடைந்து சங்கிலியால் என்னை அடித்தார். முகத்தில் காரித் துப்பினார் என்றார்.
அதிகாரிகள் கண்ணில் பட்டபோது தான் மீட்கப்பட்டுவிட்டதாக நினைத்தார். ஆனால் அதிகாரிகளும் Karlaவை பாலியல் ரீதியாகவே பயன்படுத்தினர். ஆனால் இறுதியில் அமெரிக்க குழந்தைகள் கடத்தல் தடுப்பு அதிகாரிகளின் பார்வையில்பட Karla மீட்கப்பட்டார். கடந்த 2006ம் ஆண்டு மீட்கப்பட்ட கார்லா பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.
குறிப்பாக குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு கடத்தும் நாசச் செயலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் அமைப்பில் இணைந்து பணியாற்றும் Karla, அமெரிக்காவின் House Foreign Affairs Sub Committee on Global Human Rights யுடன் உரையாடியுள்ளார். கூடவே Pope Francisஐ சந்தித்து தன சோகக் கதையை பகிர்ந்துகொண்டுள்ளார்.
உலகில் சுமார் இரண்டு கோடி முதல் மூன்றரைகோடி மக்கள் அடிமைகளாக உள்ளனர். இவர்களில் சுமார் 55 லட்சம்பேர் குழந்தைகளாவர்.
