இலங்கையில் 5 வருடமாக பெற்ற மகளை பாலியல் அடிமையாக வைத்து இருந்த இராணுவ வீரர்!!

தனது மகளை ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலாக அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­விற்­குட்­ப­டுத்தி வந்த முன்னாள் இரா­ணுவ வீர­ரான தந்தை ஒரு­வரை கம்­பளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

கைது செய்­யப்­பட்ட நபரை கம்­பளை மாவட்ட நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போது எதிர்­வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதவான் உத்­த­ர­விட்டார். கம்­பளை போவலை பகு­தியில் இடம்­பெற்ற இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சந்­தேக நபரின் முதல் மனைவி வெளி­நாடு சென்­றி­ருந்த நிலையில் அப்­போது 12 வயது சிறு­மி­யாக இருந்த பாதிக்­கப்­பட்ட 17 வயதுப் பெண் சந்­தேக நப­ரினால் தொடர்ந்து வல்­லு­ற­விற்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ள­தா­கவும் 

அக்­காலப் பகு­தியில் ஒரு­முறை மேற்­படி சிறுமி கர்ப்­ப­முற்­ற­த­னை­யத்து சந்­தேக நபர் 18 ஆயிரம் ரூபா கொடுத்து சட்­ட­வி­ரோத கருக் கலைப்பு நிலை­ய­மொன்றில் கரு­க்க­லைப்புச் செய்­த­தா­கவும் விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­துடன் சந்­தேக நபர் மனைவி வெளி­நாடு சென்­றதன் பின்னர் மாவ­னெல்லை பகு­தியில் பிறி­தொரு பெண்ணை திரு­மணம் செய்து மூன்று குழந்­தைகள் உள்­ள­தா­கவும் பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.

 சந்­தேக நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்­த­மை­யினால் சகித்­துக்­கொள்­ள முடி­யாது பாதிக்­கப்­பட்ட சிறுமி தனது பாட்­டி­யுடன் கடந்த திங்­கட்­கி­ழமை கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து பொலிஸார் சந்தேக நபர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவினை நீதிவான் பிறப்பித்தார்.