கூட்டமைப்புடன் இணையவுள்ளோம்

தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் இணைந்துகொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சி (ஈரோஸ்) அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் மறுசீரமைப்பு பிரகடன மகாநாடு ஞாயிற்றுக்கிழமை(21) மட்டக்களப்பு போகஸ் மண்டபத்தில் கட்சியின் தவிசாளர் அருளர் அருள்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.

 இதன்போதே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில், ஈழவர் ஜனநாயக முன்னணி தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டமை தமிழ் மக்களின் விடியலுக்காக செயற்படுவதற்காகும். அந்தவகையில், தமிழ் மக்களின் நலனுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கையில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்தார். -