
காங்கோவில் கடாங்கா மாகாணத்தில் தன்கான் யிகா என்ற ஏரி ஒன்று உள்ளது.
படகு போக்குவரத்து நடைபெறும் இந்த ஏரியில், மொபாவில் இருந்து காலெமி என்ற இடத்துக்கு ஒரு படகு 232 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
இந்நிலையில் 232 பேர் பயணம் செய்த அந்த படகு சென்று கொண்டிருந்த போது திடீரென தண்ணீரில் மூழ்கியது.
இந்த தகவலை அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
ஆனால் அதற்குள் ஏராளமானவர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் சிலரை மட்டுமே மீட்க முடிந்தது.
இந்த விபத்தில் 129 பேர் பலியாகி உள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை என்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதும், பலத்த காற்று வீசியதும் படகு விபத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.