பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள பர்மினியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சரித் மண்டல் (70).
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் 14ம் திகதி உயிர் இழந்தார்.
அவரது இழப்பை தாங்க முடியாமல் அவரது மனைவி தஹ்வா தேவி (65) வீட்டின் ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
உறவினர்கள் மண்டலின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டில் தேவியை காணவில்லை.
இதையடுத்து அவரது மகன் ரமேஷ் மண்டல் அவரை பல இடங்களில் தேடியுள்ளார்.
அப்போது சிலர் தேவி சுடுகாட்டை நோக்கி ஓடியதாக தெரிவித்துள்ளனர். உடனே ரமேஷ் மற்றும் உறவினர்கள் சுடுகாட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு பார்த்தால் ராம் ரித் மண்டலின் உடல் எரிந்து கொண்டிருந்த தீயில் குதித்து தேவியும் தனது உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து அதே இடத்தில் தேவிக்கும் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
|