சீனாவின் நெடுஞ்சாலை ஒன்றில் சிதறிய 2 மில்லியன் டொலர்கள் பணத்தை பொதுமக்கள் அள்ளிச்
சென்றுள்ளனர்.
சென்றுள்ளனர்.
சீனாவின் ஹாங்காங் (Hong kong) மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றிற்கு பணம் எடுத்து செல்லும் வாகனத்தில் இருந்த பணப்பெட்டி திடீரென நெடுஞ்சாலையில் விழுந்துள்ளது.
அப்போது அதிலிருந்த 2 மில்லியன் டொலர்கள் பணமும் சாலையில் சிதறியதால், இதை பார்த்த பொதுமக்கள் பணத்தை அள்ளிச்செல்ல ஓட்டமெடுத்துள்ளனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் அப்பகுதியை சுற்றிவளைத்து சீல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் பொலிசார் வருவதற்குள் எவ்வளவு பணம் கொள்ளை போனது என தெரியவில்லை.
மேலும் 2 மில்லியன் டாலர் பணத்தில் எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பதும், மக்கள் எடுத்துச்சென்ற பணம் திரும்பக் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், வங்கிக்கு சொந்தமான பணத்தை வைத்திருப்பவர்கள், அதை உடனே காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் மீது திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பரை வைத்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டால், பணத்தை வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.