48 மணி நேரத்தில் 140 தலிபான் தீவிவாதிகள் சுட்டுக்கொலை: நிறைவேறும் இராணுத்தின் சபதம்

ஆப்கானிஸ்தானில் 48 மணி நேரத்தில் 141 தலீபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16-ந் திகதி புகுந்து, 132 குழந்தைகள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தது.
இந்த தாக்குதலை தொடர்ந்து, தலீபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த ஆப்கானிஸ்தானுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது.
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப், உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவருடன் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப்கனியை சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அஷ்ரப் கனி, தீவிரவாதத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டு, தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிப்போம் என சபதம் செய்தார்.
அதன்படி ஆப்கானிஸ்தானில் குனார், நங்கர்ஹார், கஜினி, ஹெல்மாண்ட், உருஸ்கான், பால்க், ஹெராத் மாகாணங்களில் தலீபான் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறி வைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. கடந்த 48 மணி நேரத்தில் நடந்த இந்த தாக்குதல்களில் 141 தீவிரவாதிகள் பலியாகினர்.
பலியானவர்களில் கிழக்கு குனார் மாகாணத்தில் உள்ள டாங்கம் மாவட்ட தலீபான்கள் ஆதரவு கவர்னர் அகமது கானும் அடங்குவார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல்கள் தலீபான் தீவிரவாத இயக்கத்துக்கு பலத்த பின்னடைவாகும்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில், தலீபான்களின் பதில் தாக்குதலிலும், சாலையோர குண்டு வெடிப்புகளிலும் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் சிக்கி வீர மரணம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.