காதலில் அதிக அளவு ஆண்கள் ஏமாற காரணம் என்ன? தெரிந்துகொள்ள...



ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளது. மிகவும்

                                                                                                                

முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள்.

சம்பாத்தியம் இல்லாதது:

எந்த ஒரு பெண்ணும் போதிய வருமானம் இல்லாத ஆணுடன் சேர்ந்து வாழ விரும்ப மாட்டார்கள். தன்னுடைய சம்பாத்தியத்தை விட குறைவாக சம்பாத்திக்கும் ஆண்களையும் பெண்கள் விரும்பமாட்டார்கள்.

பக்குவம்:

மனைவியின் ரூபத்தில், ஆண்கள் தாயை எதிர்பார்ப்பதை போல, கணவனின் ரூபத்தில், பெண்கள் தந்தையை எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால், பக்குவமற்ற முறையில் தங்கள் கணவன் நடப்பது பெண்களுக்கு பிடிப்பதில்லை. ஏதோ சில சந்தர்ப்பங்களில் நடக்கிறது என்றால், பெண்கள் பொறுத்து கொள்வார்கள். ஆனால், இதே குணம் கணவனிடம் நிரந்தரமாக நீடித்தால், பெண்களின் மனதில் பிரிந்து விடலாம் என்ற எண்ணம் தோன்றும்.

பாலியல் ரீதியாக:



ஆண்களை பொறுத்த வரை, ஆண்கள்உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்து அதற்கான காலடிகளை வேகமாக எடுத்து வைப்பார்கள். அதனால் பெண்களிடம் நீங்கள் உரிமை எடுத்துக் கொண்டு, பாலியல் ரீதியாக அத்து மீறும் போது, அவரிடம் நீங்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறீர்கள் என நினைத்து உங்களை விட்டு பிரிய முற்படலாம்.

திருமணம் பேச்சு:

உங்கள் காதலியை நீங்கள் விரைவிலேயே திருமணம் செய்ய கேட்கலாம். இந்த உறவு பெண்களுக்கு கழுத்தை நெறிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட நேரத்தில், அவர் உங்களை நிராகரிக்கலாம்.

திருமணம்:

இப்போதைக்கு திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை என்ற உங்கள் எண்ணத்தை உங்கள் காதலி தெளிவாக புரிந்து கொண்டிருக்கலாம். எதிர் காலம் இல்லாத உறவை தொடர பெண்கள் பொதுவாக விரும்பவதில்லை. இது அவர்களிடம் பாதுகாப்பின்மை என்ற உணர்வை ஏற்படுத்தும்.

குடும்பம்:

பெண்கள் தங்களுக்கென குடும்பம் மற்றும் குழந்தைகள் என அமைத்து கொள்வதில் மிகவும் குறியாக இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை, குட்டி என பெரிய குடும்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருந்து, உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருந்தால், அவர்கள் உங்களை விட்டு பிரியலாம். பெண்கள் சமரசம் செய்ய விரும்பாத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

மாமியார் பிரச்சனை:

பொதுவாக தன் காதலனை வளர்த்த தாய், அவருடன் எப்படி நடந்து கொள்வாரோ, அதே அளவிற்கு அதே குணத்துடன்தான் திகழ்வார்கள் என்பது பெண்களின் நம்பிக்கையாகும். அப்படி இல்லாமல், அவளுக்கும் மாமியார்க்கு ஒத்து போகாமல், கணவன் தாய்க்கு எப்போதும் ஆதரவாக பேசினால், அவருக்கு கணவன் மீது ஒரு வெறுப்பு உண்டாகலாம். இதனாலும் பிரியக்கூடும்.

சலிப்பு :

ஆண்களின் மீது பெண்களுக்கு சுலபத்தில் சலிப்பு ஏற்பட்டு விடும். அதனால்தான், கெட்ட பசங்களை தேடித்தான் பெண்கள் செல்வார்கள் என்ற சொல் உண்டு. நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தால், உங்கள் காதலி உங்களை விட்டு சென்று விடலாம்