ஏதேனும் கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி கொள்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
ஷங்கரின் ஐ படத்தின் ட்ரைலரை சமீபத்தில் பார்த்த ராம் கோபால் வர்மாவுக்கு, அது மிகவும் பிடித்துப் போகவே தன் கருத்தை டுவிட் செய்துள்ளார்.
அதில் ஐ பட ட்ரைலர் பார்த்தேன், பிரமித்து விட்டேன். ஐ படத்தோடு மோத நினைப்பவர்கள் முட்டாள்கள். ஷங்கரால்தான் இந்திய சினிமாவை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்த முடியும்.
தமிழகத்தில் ரஜினிகாந்த், ஜெயலலிதா இருவரை விட பலம் வாய்ந்தவர் ஷங்கர்தான். அவரது படங்கள் ரஜினி படங்களை விட பெரியவை, அதிக வசூல் குவிப்பவை.
ஜெயலலிதாவை விட ஷங்கரின் செல்வாக்கு அதிகம் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் ட்ரைலரைப் பாராட்டிவிட்டுப் போகாமல், ரஜினியையும் ஜெயலலிதாவையும் குறித்து கருத்து வெளியிட்டதால், கோபால் வர்மாவுக்கு கண்டனங்கள் குவிகின்றன
 |