காதலியின் நிர்வாண படங்களை இணையத்தில் பதிவேற்றிய காதலன்


பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவர், ஜாதியை காரணம் காட்டி தன்னை புறக்கணித்த காதலியை பழிவாங்க அவரது நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

பெங்களூரு பேனர்கட்டா ரோடு பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் ஜெயநகரிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த பெண்ணுடன் சமூக வலைத்தளம் மூலம் எல்.ஹர்ஷா என்ற 24 வயது வாலிபர் தன்னை ஒரு பொறியியலாலர் என்று அறிமுகம் செய்து பழக ஆரம்பித்துள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு வருமளவுக்கு அதிகரித்துள்ளது.

அந்த பெண் உயர்ஜாதி என்று கருதப்படும் ஜாதியை சேர்ந்தவர் என்பதை அறிந்த ஹர்ஷா, தன்னையும் அதே ஜாதியை சேர்ந்தவன் என்று ஏமாற்றியுள்ளார்.

இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கினாலும் தனது ஜாதி அடையாளம் பற்றி ஹர்ஷா மௌனமாகவே இருந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது ஹர்ஷா வந்துள்ளார்.

அப்போது அந்த பெண் வெளியே போவதற்காக தனது அறைக்கு சென்று ஆடை மாற்றியதை அவருக்கே தெரியாமல் கைப்பேசியில் ஹர்ஷா பதிவு செய்துள்ளார்.

பின்னர், அந்த பெண்ணின் நிர்வாண படங்கள் தன்னிடம் உள்ள தைரியத்தில், தனது ஜாதியை ஹர்ஷா கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியைடந்த கவிதா, தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்ததையடுத்து, வேறு ஜாதி ஆணுக்கு திருமணம் செய்ய மாட்டோம் என்று உறுதியாக கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த ஹர்ஷா, தன்னிடமுள்ள நிர்வாண படங்களை காண்பித்து திருமணம் செய்யாவிட்டால் இணையத்தில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியுள்ளார்.

பின்னர் அக்டோபர் மாதத்தில் 5 ஆபாச வலைதளங்களில், அந்த பெண்ணின் நிர்வாண படங்களை பதிவேற்றி முகவரி, தொலைப்பேசி எண் அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பலரிடம் இருந்து அந்த பெண்ணுக்கு தொலைப்பேசி அழைப்புக்கள் வந்ததால் உறவினர்கள் மூலம் நடந்தவற்றை அறிந்துள்ளார்.
மேலும், இதனால் ஆத்திரமடைந்த அவர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து ஹர்ஷா மீது வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.