நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்கின்ற எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? கூட்டமைப்பினர் யாரை ஆதரிக்கப் போகின்றனர் என்கின்ற கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு நிபந்தனையற்ற முறையில் எந்தவிதமான ஒப்பந்தங்களுமின்றி ஆதரவு வழங்க முன்வந்திருக்கின்றனர். இவர்களின் இந்த முடிவானது தமிழர்களை படு பாதாளத்தில் தள்ளிவிடுகின்ற ஒரு நிலையினை தோற்றுவிப்பதுடன் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் மிகப்பெரும் வரலாற்றுத் தவறுகளைச் செய்து வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த முடிவானது சரியானதா? இவர்கள் தமிழ் மக்களை சரியான முறையில் வழி நடாத்துகின்றார்களா என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே இருக்கின்றது. இவர்களின் இந்த முடிவானது தமது சுயலாபங்களுக்காக தமிழர்களையும் அவர்களின் உரிமைகளையும் அடமானம் வைப்பதைப் போன்றதாகும்.
சிறுபாண்மை சமுகங்கள் சார்ந்த கட்சிகள் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதில் தமது சமூகம் சார்ந்து தமது சமூக அக்கறையோடு முடிவுகளை எடுக்கவேண்டிய ஒரு கட்டாய கடப்பாடு சிறு பாண்மை சமூகத்தை பிரதிபலிக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கின்றது.
இன்றைய இந்த பரபரப்பான அரசியல் காலகட்டத்தில் பல கட்சித் தாவல்கள் இடம்பெற்றவண்ணமுள்ளன. தங்களின் சுயலாப அரசியலுக்கும் அப்பால் தமது சமூகம் சார்ந்து காத்திரமான முடிவுகளை எடுக்கவேண்டிய காலகட்டமிது.
இன்று முஸ்லிம் கட்சிகளும், பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் இருந்து விலகி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு வழங்க முன் வந்திருக்கின்றனர்.
இந்த கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பல சலுகைகளைப் பெற்று தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகளாக இருந்த இவர்கள் ஏன் இன்று மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள் என்கின்ற கேள்வி பலருக்குள்ளும் இருக்கின்றது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனி அலகு, முஸ்லிம்களுக்கு தனியாக கரையோர மாவட்டம் வழங்குவதாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கான தனி அலகுக்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் மைத்திரி பக்கம் செல்வதில் தவறில்லை. முஸ்லிம்களின் நீண்டநாள் கனவு அது.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையற்று எந்தவிதமான ஒப்பந்தங்களுமற்று ஆதரவு வழங்கியதற்கான காரணம் என்ன? முஸ்லிம்களுக்கான தனி அலகினை, முஸ்லிம்களுக்கான கரையோர மாவட்டத்தினை ஏற்றுக்கொள்கின்றனரா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைக்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பக்கம் சார்ந்து செல்வது மிகப்பெரும் சந்தேகங்களை தோற்றுவித்திருக்கின்றன.
மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனியாக ஒரு அலகு வழங்கப்படும் நிலையில் அம்பாரை மாவட்ட தமிழர்களின் நிலை என்ன? இவர்களைப்பற்றி கூட்டமைப்பினர் ஏன் சிந்திக்கவில்லை.
மைத்திரியின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்கப்படும் நிலையில் தமிழர்களுக்கு பல்லுக்குத்துவதற்குக்கூட ஒரு துரும்புகூட மைத்திரிபால சிறிசேன அவர்களால் வழங்கப்படாது என்பது யதார்த்தமான உண்மை.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் மிக மோசமான ஒரு இனவாதி என்பதற்கும் அப்பால் அவருடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி போன்றன மிக மோசமான தமிழர்களை பிடிக்காத கட்சிகள் தமிழர்களுக்கு எதைச் செய்யப்போகின்றார்கள்.
தமிழர்களுக்கு மைத்திரிபால ஏதாவது செய்ய நினைத்தாலும் ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி போன்ற கட்சிகள் செய்ய விடுவார்களா? ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி போன்றவர்கள் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதனை வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்.
மைத்திரிபால அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்கூட தமிழர்கள் பற்றியோ, தமிழர்களுக்கான தீர்வு பற்றியோ எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
மைத்திரி அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் முஸ்லிம்களுக்கான தனி அலகு வழங்கப்படும். இதன் மூலம் முஸ்லிம்களால் தமிழர்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவது அதிகரித்து தமிழர் பிரதேசங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் அபகரிக்கப்படும்.
தமிழர்கள் இருந்ததையும் இழந்து மானங்காக்கும் கோமணமும் இல்லாத நிலை வரும்.