
ஆல்ப்ஸ் மலை பகுதியில் உள்ள பாறை போலவே காட்சியளிக்கும் இந்த மறைவிடம் போன்ற தங்குமிடத்தை கட்டிட நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த பாறையின் அருகே வாகனத்தில் கடந்து சென்றாலோ, நடந்து சென்றாலோ கூட வித்தியாசத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.
பார்ப்பதற்கு நிஜப் பாறையை போலவெ உள்ள இதன் உள்ளே ஒரு நபர் மட்டும் தங்கும் அளவிற்கு இடவசதி அமைந்துள்ளது.
மேலும், மேசை ஒன்றும் சிறிய மெத்தை போன்ற அமைப்பும், ஒரு சிறிய ஜன்னலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.