இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல்
பிரச்சார உத்திகள்
பின்பற்றப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜித
சேனாரட்ன தெரிவித்துள்ளார்.நேரு – காந்தி குடும்ப ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து எவ்வித பணமும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்ற போதிலும், நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சார உத்திகள் பின்பற்றப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நரேந்திர மோடிக்காக பிரச்சாரம் செய்த சில நிறுவனங்களின் ஆலோசனை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை சில வேளைகளில் இந்தியாவும் விரும்பக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி ஒட்டுக் கேட்டல்கள் இடம்பெறுவதனால் வைபர், செல்லிடப்பேசி அப்ளிகேசன்கள் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக தொடர்பாடல்கள் பேணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் வழிமுறையைப் பயன்படுத்தியே ஆளும்கட்சியிலிருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி மணித்தியாலத்திற்கு ஒரு தடவை எனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை ஆளும் கட்சியில் தக்க வைத்துக்கொள்ள முயற்சித்தார் என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நண்பர் ஒருவரை பிரிந்து செல்வது துயரமானது என்ற போதிலும் யுத்த வெற்றியின் பின்னர் ஜனாதிபதியின் நடவடிக்கைளில் பாரிய மாற்றத்தை உணர முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றையவர்களின் கருத்துக்களுக்கு மதிபளித்து வந்தார் எனவும், பின்னர் குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.