ஜெயலலிதா வழக்கில் மீண்டும் சிக்கல்: மீண்டும் மனு கொடுத்த திமுக

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜராகக் கூடாது என்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கர்நாடக முதன்மை நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக அன்பழகன் அனுப்பியுள்ள மனுவில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங், பலமுறை குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளார்.
மேலும் சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் ஆளாகி உள்ளார். இதற்காக அவர் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் செலுத்தி உள்ளார்.
எனவே அவரை தற்போது ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராக அனுமதிக்க கூடாது. வேறு ஒருவரை அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.