காரில் செக்ஸ் வைத்த டீன் ஏஜ் ஜோடி, நாசமான பல கார்கள்

17 வயது ஆன ஒரு டீன் ஏஜ் ஜோடி நீல நிற Inokom Atos காரின் உள் சந்தேகத்துக்கிடமான முறையில் கோட்டா தமன்சரா என்ற இடத்தில்  ஏதோ செய்து கொண்டிருந்தார்கள், இது மலேசியாவில் உள்ள ஒரு இடமாகும். 

 செவ்வாய் இரவு 10.30 மணிக்கு காரினுள் கசமுசா என்று சந்தேகப்பட்ட போலிசார் காரை நெருங்கி இந்த ஜோடியை வெளியே வர சொன்னார்கள், ஆனால் வெளியே வராமல் இந்த ஜோடி மிக வேகமாக காரை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.
போலிசாரும் பின்னால் வாகனத்தில் துரத்த ஆரம்பித்தனர், ஒரு மணி நேர துரத்தலுக்கு பின் தமன்சாரா டோல் பிளாசா அருகில் ஒரு ஹோண்டா சிவிக் காரை மோதி நிறுத்தினர். இதில் இந்த ஜோடி லேசாக காயமடைந்தது, இதையடுத்து அந்த ஜோடியை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர், சுங்கை புலாவ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இந்த ஜோடி ஷா ஆலம் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்


இந்த துரத்தலில் பல வாகனங்கள் இந்த ஜோடியால் சேதமடைந்தது, காரை ஆபத்தான முறையில் ஓட்டுவது, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.