வெலே சுதாவின் வாக்குமூலத்தையடுத்தே துமிந்த எம்.பியின் கணக்குகள் சோதனை

நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவின் கணக்கு விவரங்களை திரட்டுவதற்காக, அனைத்து நிதி நிறுவனங்களிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அனுமதியளித்துள்ளார். 

பெரும் போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதாவினால் வழங்கப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு தான், பெருந்தொகையான பணத்தை வழங்கியதாகவும் வெலே சுதா தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.