மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவேளை பாதுகாப்பு துறை அமைச்சு அவர் கைகளில் தான் இருந்தது. அதன் கீழ் நேரடியாக இயங்கிவந்த கொழும்பு பண்டார நாயக்க விமான நிலையத்தில் நடப்பது அவதானிக்கப் படுகிறது சோதனை நடக்கும் வேளையில் சப்பாத்திற்குள்(சூ) கசை வைத்து கொடுக்கிறார்கள். பாஸ்போட்டுக்கு கீழ் காசை வைத்து கொடுக்கிறார்கள். பின்னர் சில பாதுகாப்பு அதிகாரிகள் எந்த ஒரு பயமும் இல்லாமல் நேரடியாகவே காசைப் பெறுகிறார்கள்.
தமிழ் பெண்களை மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை குறிவைத்தே நடக்கிறது. வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு(மத்திய கிழக்கு நாடுகளில்) வேலைசெய்துவிட்டு நாடு திரும்பும் பெண்களிடம் இந்த அதிகாரிகள் பெரும் பணத்தை பிடங்கும் அவலம். மகிந்தரின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு மட்டும் தான் கொடுமை நடந்தது என்று நாம் ஒரு வேளை நினைக்கலாம். ஆனால் நாட்டிற்கு வந்த சூவீடன் பெண் ஒருவரை, சிங்கள காவலாளி ஒருவர் ஏர் போட்டில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு பண்டார நாயக்க விமான நிலையத்திற்கு தனியாக வந்த சுவீடன் நாட்டுப் பெண் ஒருவரை சோதிக்கவேண்டும் என்று கூறி, பாத்ரூமுக்கு போகும்படியும், அங்கே பெண் சோதனையாளர் ஒருவர் வந்து உங்களை சோதிப்பார் என்றும் கூறியுள்ளார் ஒரு விமான நிலைய அதிகாரி. ஆனால் குறித்த இடத்திற்கு சென்ற பெண் அதிர்ந்து போனார். அது பாத்ரூம் அல்ல. கிளீனிங் பொருட்களை வைக்கும் அறை. உடனே அங்கே நுளைந்த குறித்த சிங்கள அதிகாரி, சுவீடன் பெண்ணை கட்டிப்பிடித்து , பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 45 நிமிடங்கள் கழித்து அப்பெண் மேல் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யும் வேளை இந்த வீடியோ பதிவாகியுள்ளது.
ஆனால் இதுவரை இலங்கை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிடப்பில் இருந்த இந்த வீடியோ தற்போது சில மீடியாக்களுக்கு கசிந்துள்ளது. சுவீடன் நாட்டுப் பெண்ணிடம் விசாரிக்கும் அதிகாரி, இச்சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம். நாம் சீக்கிரெட்டாக(ரகசியமாக) விசாரிப்போம் என்று கூறி தாஜா செய்வதையும் வீடியோவில் காணலாம்.