
தனித்தனிக் கட்சிகளாக பிரிந்து அரசியல் நடத்துவதிலும் பார்க்க, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசியலில் ஈடுபட்டால் பாரியளவிலான மாற்றமொன்றினை ஏற்படுத்த முடியுமென்ற காரணத்துக்காகவே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது. வடக்கு, கிழக்கினைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கூட்டமைப்பிலும் பல கட்சிகள் இணைந்திருக்கின்றன.
அதேபோல், மலையகத்திலும் தலைநகரிலும் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயற்பட முடிவுசெய்துள்ளார்கள். இந்தக் கூட்டமைப்பில், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஸ்ணன், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கே.வேலாயுதம், முன்னாள் பிரதி அமைச்சர் புத்திர சிகாமணி ஆகியோர் இந்த கூட்டமைப்பில் அடங்கவுள்ளதாக தெரியவருகிறது.