
இன்னும் மூன்று நாட்களில் 'கத்தி' படம் 100வது நாளைத் தொட உள்ளது. கடந்த ஆண்டில் வெளிவந்த ஒரு படம் 2015லும் வெற்றிகரமாக ஓடி, சாதனை புரிவது சாதாரண விஷயமில்லை. 'துப்பாக்கி' அளவிற்கு 'கத்தி' படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை என்றாலும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணிக்கு வெற்றிப்படமாக அமைந்தது. சில ஏரியாக்களில் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் நஷ்டம் ஏற்படுத்தியது என்ற உண்மையை நாம் சொன்னாலும் விஜய் ரசிகர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய அபிமான நடிகரின் படம் 100 நாள் ஓடியது என்பதை மட்டும்தான் பார்க்கப் போகிறார்கள். வெற்றி, தோல்வி என்பதையும் மீறி 'கத்தி' படம் இத்தனை நாட்கள் ஓடியதே ஒரு சாதனைதான்...