கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இலங்கையை விட்டு தப்பியோடிய, பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய மைத்திரிபாலவை கைதுசெய்ய அனைத்து ஆவணங்களையும் தயார் படுத்தி வைத்திருந்துள்ளார் என்று அறியப்படுகிறது. மகிந்த ராஜபக்ஷ வென்றுவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், உடனடியாக மைத்திரியை கைதுசெய்ய மகிந்த போட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக மேலும் அறியப்படுவது,
நாட்டைவிட்டு தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய சிலவேளைகளில் ம ஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றிருந்தால் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய திட்டமிட்டிருந்ததாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துல ரோஹன விஜேசிங்க என்பவருக்கு மைத்திரிபால சிறிசேன 16 கோடி ரூபா வெளிநாட்டு பணம் கொடுத்ததாக தம்மிக்க பண்டார இலங்கசிங்க என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்ய மஹிந்த பாலசூரிய திட்டமிட்டிருந்தார்.
தம்மிக்க பண்டார இலங்கசிங்க முறைப்பாட்டை அவருக்கு வழங்கியது முன்னாள் சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரியவாகும். சட்டத்தரணிகள் குழுவை கொண்டு அமைச்சுக்கு உள்ளேயே தம்மிக்கவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு மஹிந்த பாலசூரிய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்ட நிலையில் அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளார். அதில் சந்தேகம் கொண்ட மஹிந்த பாலசூரிய மைத்திரிபாலவை அழைத்து வாக்குமூலம் பெற்று நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு இரகசிய பொலிஸ் பிரதானிக்கு அறிவித்துள்ளார். ஆனால் இரகசிய பொலிஸார் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
இவை அனைத்தும் நடக்காததால் மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றதும் பொலிஸ்மா அதிபரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இரகசிய பொலிஸார் கொண்டு மைதத்திரபாலவை கைது செய்ய மஹிந்த பாலசூரிய திட்டமிட்டிருந்தார். அதற்கான அனைத்து ஆவணங்களையும் அவர் தயார் செய்திருந்தார். இந்த சூழ்ச்சித் திட்டம் ஊடகங்களுக்கு கசிவதற்கு முன்னர் மஹிந்த பாலசூரிய 18ம்; திகதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.