முன்னாள் மனைவியிடம் நலம் விசாரித்த கமல்ஹாசன்

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் “தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் ஆயிரம் படங்களை நிறைவு செய்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மும்பையில் நேற்று முன் தினம் (20) பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், அபிஷேக்பச்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமிதாப்பின் மனைவி ஜெயாப்பச்சன், கமலின் முன்னாள் மனைவி சரிகா, ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகைகளும் கலந்துகொண்டிருந்தனர்.

விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சரிகாவைப் பார்த்த கமல்ஹாசன் கை குலுக்கி நலம் விசாரித்தார். அப்போது, சரிகா சிரித்துக்கொண்டே கமலுடன் கை குலுக்கினார்.