சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு‘ படத்தில் நடித்து கோலிவுட்டில் இன்ப அதிர்ச்சி கொடுத்ததுபோல் முதன்முதலாக அறிமுகமான மல்லுவுட் திரையுலகிலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பாஸ்கர் தி ராஸ்கல்‘ படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இது போதாதென்று தனது தோழிக்கும் சமீபத்தில் ஷாக் கொடுத்தார்.மஞ்சுவாரியரும், நயன்தாராவும் நெருங்கிய தோழிகள். சமீபத்தில் மஞ்சுவுக்கு மல்லுவுட் திரையுலகம் சார்பில் சிறப்பு விருது அளிக்கப்பட்டது. அவரை நேரில் பாராட்ட முடிவு செய்தார் நயன்.
சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மஞ்சு நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்துக்கு திடீரென்று விசிட் செய்தார். அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியதுடன், மஞ்சு ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் பங்கேற்றார். நயன்தாராவை மலையாளத்தில் முதன்முதலாக ‘மனசின்நக்கரே‘ படத்தில் அறிமுகப்படுத்தியவர் சத்யன் அந்திக்காடு. டயனா மரியம் குரியன் என்றிருந்த பெயரை நயன்தாரா என்று மாற்றியதும் அவர்தான். தன்னை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குனருடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறார் நயன்தாரா. அவர் இயக்கும் படத்தில்தான் தற்போது மோகன்லால் ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.