லட்சுமி மேனனை கிண்டல் செய்யும் நடிகைகள்

பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் நடித்தபோது லட்சுமிமேனன் ஒன்பதாவது வகுப்புதான் படித்து வந்ததாக சொன்னார். அவரது தோற்றத்தைக் கண்டு நம்புற மாதிரி இல்லையே என்று சிலர் சொன்னாலும், பின்னர் அவர் எத்தனை படித்தாலும் நமக்கு என்ன. கொடுத்த கேரக்டரில் சரியாக நடித்தால் சரி என்று அதை அப்படியே விட்டு விட்டனர். அதையடுத்து, அவர் தமிழ்ப்படங்களில் பிசியாகி விட்டார் லட்சுமிமேனன். 2012ல் கும்கியில் நடித்தவர் அதையடுத்து இரண்டே வருடங்களில் குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என அரை டஜன் படங்களில் நடித்து முடித்து விட்டார். அதில் சிப்பாய் மட்டும் இன்னும் கிடப்பிலேயே கிடக்கிறது.

இந்த நிலையில், கொம்பனுக்கு பிறகு அவருக்கு புதிய படங்கள் எதுவுமே கமிட்டாகவில்லை. ஆனபோதும், அவர் தனக்கு படமே இல்லாததை காட்டிக்கொள்ளவில்லை. மாறாக, ப்ளஸ் 2 தேர்வு உள்ளது அதனால்தான் புதிய படங்களை தள்ளி வைத்திருக்கிறேன். பரீட்சை எழுதிய பிறகு மீண்டும் அதிரடியாக படங்களை கைப்பற்றுவேன் என்று கூறி வருகிறார். ஆனால் அதைக்கேட்கும் சில கோலிவுட் நடிகைகளோ, தனக்கு படமே இல்லை என்பதை ஓப்பனாக சொல்ல கஷ்டப்பட்டு படிப்பை காரணம் காட்டுவது ஒன்றும் தப்பில்லை. ஆனால் எத்தனை வருடத்துக்கு இப்படி ப்ளஸ்௨ படிப்பதாகவே இவர் சொல்லிக்கொண்டிருப்பார். ஆளைப்ப்பாத்தா ப்ளஸ் ௨ படிக்கிறவர் மாதிரியா தெரியுது? என்று அவரை கிண்டல் செய்யும் விதத்தில் பேசி வருகிறார்கள்.