தமிழர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தர அரசுக்கு அழுத்தம்!


தமிழ் மக்கள் பேரவை மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

மன்னாரில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகள் குறித்து, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் வினவியபோதே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

தமிழ் மக்களின் தேவைகளுக்கு அமைய குறித்த பேரவை செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழர்களது தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்க்க தமிழ் மக்கள் பேரவை ஆஜராவது முக்கியம் என இதன்போது மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.