Showing posts with label Batticaloa. Show all posts
Showing posts with label Batticaloa. Show all posts

ம.தெ.எ.ப.களுவாஞ்சிகுடி பிரதேச செயலக 2016 ஆண்டுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

(பிரகாஸ்) ம.தெ.எ.ப.களுவாஞ்சிகுடி பிரதேச செயலக 2016 ஆண்டுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (28.02.2016) இடம்பெற்றது 







மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி

மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி  இன்று (26.02.2016 ) இடம்பெற்றது இவ்விளையாட்டுப் போட்டியின் பிரதம அதிதியாக கோவிந்தன் கருணாகரம் கலந்துகொண்டார்.














கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளரான பெண் கொலைசம்பவம் தொடர்பாக ஒருவர் கைது !

கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளரான பெண் ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.


இதுபற்றி தெரியவருவதாவது குறித்த கொலை செய்யப்பட்ட பகுதியில் மோட்டார்சைக்கிள் தலைக்கவசம் ஒன்று இருப்பதை கவனித்த பொலிசார் அது தொடர்பாக விசாரணையின் போது அது கொலையாளி பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் தலைக்கவசம் என தெரியவந்ததையடுத்து பொலிசார் குறித்த நிதிக்கம்பனியின் முன்னாள் உதவி முகாமையாளராக கடமையாற்றிய சுடலை வீதி நற்பட்டிமுனையைச் சேர்ந்த 40 வயதுடைய ரி.உதயகுமார் என்பவரை கைது செய்தனர்


இக் கம்பனியில் கடமையாற்றிய முன்னாள் உதவி முகாமையாளரின் ஊழல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் அவரை மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவரின் பதவிக்கு மட்டக்களப்பில் கடமையாற்றிய கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரன் சுலஷனா நியமிக்கப்பட்டு கடமைகளை பெறுப்பேற்று கடந்த 2 வாரங்களுக்கு மேல் கடமையாற்றிவருகின்றார்.


இதனால் ராஜேஸ்வரன் சுலஷனர் மேல் ஏற்பட்ட கோபம் காரணமாக அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பவதினமான சனிக்கிழமை பகல் 2.30 மணிக்கு கம்பனியினுள் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்துடன் உள்நுளைந்து தலைக்கவசத்தை கழற்றிவைத்துவிட்டு அவரின் கழுத்தை வெட்டி கொலை செய்துவிட்டு தலைக்கவசத்தை எடுக்காத நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் கொலக்கு பயன்படுத்திய கத்தியை தப்பி ஓடும்போது வீசியுள்ளதாகவும் அவர் பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை கல்முனை பொலிசாரும் விசேட புலனாய்வு பிரிவும் மேற்கொண்டுவருகின்றனர்

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது 26.02.2016 நேற்று மாலை இடம்பெற்றது.








களுதாவளை விவசாயப்பிரதேசத்தில் உரம் கிருமிநாசினிகள் என்பன தொடர் கொள்ளை !

விவசாயத்தில் திகழ்ந்து விளங்கும் களுதாவளை பிரதேசத்தில் இந்த வருட ஆரம்பம் முதல் பல திருட்டுச்சம்பவம்கள் இடம் பெற்றுக் கொன்டு வருகின்றது.


 இவைகள் தொடர்பாக பொலீசாரிடம்  முறைபாடு தொடரப்பட்டுள்ளது மேலும் தெரிய வருவதாவது நேற்றி இரவு கடைசியாக இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்று இருந்தது இங்கு சுமார் 50 ஆயிரம் ரூபா பெருமதியான சேதனப்பொருட்கள் கழவாடப்பட்டுள்ளது ..

எனவே களுதாவளை வை.எம்.சி.ஏ பகுதிகளிலே அதிகமாக இந்த திருட்டு சம்பவம் இடம் பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமை தொடர்பாக களுதாவளை விவசாயிகள் மிக மனவேதனை அடைவதாக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றனர் மேலும் இந்த கொள்ளையர் கூட்டத்தினை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேன்டும் எனவும் கூறப்பட்டது.

தழிழர்களை கணக்கெடுக்காத அரசுடன் நாம் எதுக்கு கை கோற்க வேண்டும் ? ப. உ யோகேஸ்வரன் சீற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 3,270 பேர் காணாமல் போயுள்ளார்கள்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார். மட்டக்களப்பு, புலிபாய்ந்தகல் அ.த.க. பாடசாலையின் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது, எமது உறவுகளில் பலர் காணமல் போயுள்ளார்கள். 

அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காமல் தினமும் வேதனையுடன் வாழ்கின்றனர். 1983ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 1,552 பேர் காணாமல் போயுள்ளார்கள், அவர்களை இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுக்களுமே கடத்திச் சென்றுள்ளதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். 1987இல் இந்திய இராணுவத்தினரால் 165 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

1990 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 1,560 பேர் காணமல் போயுள்ளனர். இவர்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமட அடைந்தவர்களில்; விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை அறியாத நிலையில் அவர்களது உறவினர்கள் அலைந்து திரிகின்றார்கள். யுத்தத்தின் பின்னர் 130 க்கும் மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளார்கள். 

அவர்கள் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது, யார் யார் பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள் என காணாமல் போனவர்களது உறவினர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். இதுவரை இவ்விடயங்கள் தொடர்பாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விசாரணைகள் மீது எமது உறவுகள் நம்பிக்கை இழந்துள்ளனர்' என்றார்.

புதிய காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சாப்பாட்டுக்கடைகள், உணவகங்கள், ஹோட்டல்கள், கோழி இறைச்சி உதவாதமை கண்டுபிடிப்பு !

காத்தான்குடி நகரசபைப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை காலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

 புதிய காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சாப்பாட்டுக்கடைகள், உணவகங்கள், ஹோட்டல்கள், கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பாவனைக்கு உதவாத இறைச்சி, சமைக்கப்பட்ட கறிகள், ரொட்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதி விபத்தில் வயோதிபர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி இரண்டாம் குறிச்சி பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். 

 காத்தான்குடி பிரதான வீதியை துவிச்சக்கரவண்டியில் கடக்க முயற்சித்தவர் மீது டிப்பர் வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது துவிச்சக்கர வண்டியில் சென்ற காத்தான்குடி இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.எப். ஆதம்லெவ்வை (78) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7,846 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7,846 குடும்பங்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார். 

மேலும், மாவட்ட செயலாளர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸின் முயற்சியில் இவ்வாண்டு யுன் ஹபிடாட் நிறுவனத்தின் மூலம் 800 வீடுகளும் மீள்குடியேற்ற அமைச்சு ஊடாக 1,000 வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளின்றி உள்ள குடும்பங்களின் விவரம் வருமாறு: 

பிரதேச செயலளார் பிரிவு - குடும்பங்களின் எண்ணிக்கை கோறளைப்பற்று வடக்கு - 234 கோறளைப்பற்று மத்தி -296 கோறளைப்பற்று மேற்கு - 39 கோறளைப்பற்று - 309 கோறளைப்பற்று தெற்கு -840 ஏறாவூர்ப்பற்று -964 ஏறாவூர் நகர் - 120 மண்முனை மேற்கு -1,040 மண்முணை வடக்கு -475 காத்தான்குடி -59 மண்முனைப்பற்று -101 மண்முனை தென்மேற்கு -930 போரதீவுப்பற்று -2,329 மண்முனை தென்எருவில்பற்று -110

கூட்டமைப்புடன் இணையவுள்ளோம்

தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் இணைந்துகொண்டு எதிர்கால அரசியல் நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சி (ஈரோஸ்) அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியின் மறுசீரமைப்பு பிரகடன மகாநாடு ஞாயிற்றுக்கிழமை(21) மட்டக்களப்பு போகஸ் மண்டபத்தில் கட்சியின் தவிசாளர் அருளர் அருள்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.

 இதன்போதே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டது. இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில், ஈழவர் ஜனநாயக முன்னணி தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டமை தமிழ் மக்களின் விடியலுக்காக செயற்படுவதற்காகும். அந்தவகையில், தமிழ் மக்களின் நலனுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கையில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்தார். -

மீண்டும் சிறைவாசல் எப்போது விடிவுகிட்டும் பிள்ளையான் !

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட நான்கு பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மூவரையும் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா இன்று உத்தரவிட்டார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கடந்த 2005ஆம் ஆண்டில் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர். 

இதேவேளை, சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரி, மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரணை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்திராணி விஸ்வலிங்கம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்

அந்நியர் தழிழருக்கு கொடுத்த காப்புகளை தற்போது கானமுடியவில்லை சிற்றம் கொன்ட ப.உ ஶ்ரீநேசன்


அந்நியர்களால் சிறுபான்மையோருக்கென்று வகுக்கப்பட்ட காப்பீடுகளை எமது நாட்டின் ஆட்சியாளர்களே தகர்த்து விட்டனர். ஆங்கிலேயரால் இலங்கைக்கு வரைந்தளிக்கப்பட்ட "சோல்பரி" யாப்பில் சிறுபான்மை மக்கள் விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு இருந்தது, அதற்கென்று சிறுபான்மையோர் காப்பிட்டு ஏற்பாடுகள் வளங்கப்படிருந்தன. 

அவற்றை எல்லாம் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட எமது ஆட்சியாளர்களே வழங்க மறுத்துவிட்டனர். என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா . ஸ்ரீநேசன் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 'புதிய அரசியலமைப்புக்கான முன் மொழிவுகள்' விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார். 

 மேலும் உரையாற்றிய அவர் சோல்பரி யாப்பின் 29 ஆவது சரத்தின் இரண்டாவது உபபிரிவில் உள்ள நான்கு விதிகள் காணப்பட்டன. அவை எந்தவொரு சமுகப்பிரிவினரதும் சுதந்திரமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த இயலாத வகையிலும் ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்கப்படாத சிறப்புரிமைகளை வேறு ஒரு சமுகப்பிரிவினருக்கு வழங்க முடியாத வகையிலும் அமைந்து இருந்தது. இதனோடு இணைந்து கீழ் சபையின் ஆறு நியமான உறுப்பினர்கள், மேல் சபையான செனட் சபை, சுதந்திரமான நீதிச்சேவை ஆணைக்குழு, நடுநிலையான பொதுச்சேவை ஆணைக்குழு , பல அங்கத்துவ தேர்தல் தொகுதிகள், கோமறைக்கழகம் என்பன சிருபன்மையோரை பாதுகாப்பதற்காக ஆங்கிலேயரால் எமக்கு அளிக்கப்பட்டிருந்தன.

 ஆனால் இந்த யாப்பு மாற்றப்பட்டு 1972யில் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு யாப்பில் சிறுபான்மையோர் காப்பிட்டு அம்சங்கள் நீக்கப்பட்டு இருந்தன. அந்த யாப்பில் அரச கரும மொழி சிங்களம் என்றும் அரச மதம் பௌத்தம் என்றும் பொறிக்கப்பட்டதோடு சிறுபான்மை தமிழ் மொழியும், மதங்களும் புறக்கணிக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டன . தொடர்ந்து 1978 இல் கொண்டு வரப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பிலும் கூட சிங்கள மொழி, பௌத்த மதம் என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 

எனவே தமிழ் இளைஞர்கள் ஜனநாயக வழியில் நம்பிக்கையிழந்து வன்முறை அரசியலுக்குள் தள்ளப்பட்டனர். 30 வருட கால உள்நாட்டு யுத்தமும் நீடித்தது இதன் ஊடாக இவ் அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டி படிப்பினைகள் பல உள்ளன. 

எனவே புதியதொரு அரசியல் யாப்பு பற்றிய சிந்தனையை நல்லாட்சி என்று சொல்லப்படும் அரசாங்கம் எட்டியுள்ளது. ஆதலால் கடந்த கால கசப்பான படிப்பினைகளை கருத்தில் கொண்டு இனிமேலும் அமையப்போகின்ற அரசியல் யாப்பானது முன்னைய யாப்புகளைப் போன்றல்லாமல் ஒற்றயாட்சி பரிமாணம் நீக்கப்பட்டு கூட்டாட்சி தத்துவம் அமையக் கூடியதாகவும், நியாயமானதும் நீடித்து நிற்கக் கூடியதுமாகவும் அமைய வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.

அகோரமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடந்த குருக்கள்மட யுவதி !! (படங்கள் உள்ளே)

அகோரமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடந்த குருக்கள்மட யுவதி !! தற்பொழுது குருக்கள்மடம் பிரதேசத்தில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அடையாளந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


நேற்று இரவு குருக்கள் மடம் பகுதியில் இந்த சடலம் கண்ணடெுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமொன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த பெண் மஞ்சள் நிற ஆடையை அணிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்ணின் உடலில் எவ்வித வௌிப்புற காயங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தற்போது குறித்த சடலம் உள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

களுதாவளை களுவாஞ்சிகுடி பிரதேச இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் புதிய திட்டமே சதொச விற்பனை நிலையங்கள் !

நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டில் உள்ள சகல பிரதேசங்களிலும் மக்களின் நன்மை கருதி சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு  வருகின்றன.

கைத்தொழில் வணிக அமைச்சின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தை அண்டிய மக்களின் நன்மைகருதி சதொச விற்பனை நிலையம் ஒன்று திறக்கப்படவுள்ளது.

இது பற்றி ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் கைத்தொழில் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான  கோ.கணேசமூர்த்தி தெரிவிக்கையில்.
எமது பிரதேச மக்களின் நன்மைகருதி களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் சதொச விற்பனை நிலையம் ஒன்று திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக குறிப்பிட்டார்.

அம்பாரை பகுதிகளில் திட்டமிட்டு பறிக்கப்படும் தழிழ் மக்கள் காணிகள் !

கடந்த யுத்தத்தைக்; காரணம் காட்டி கடந்த ஆட்சியளர்களினால் அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டு தமிழர்களின் 11 பூர்வீகக் கிராமங்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன், 

இன்றும் 07 தமிழ்க் கிராமங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்ற நிலைமை காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (20) அரசாங்க ஓய்வூதியச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் பாண்டிச்சேரி, கோவா போன்ற இடங்களில் காணப்படுகின்ற ஒரு நிலத் தொடர்பற்ற சமஷ்டி முறையிலான ஆட்சியை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. அப்போது எமது பூர்வீகக் கிராமங்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதன் மூலமாக அழிந்து போயுள்ள தமிழர்களின் கல்வி, கலை, கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டு நிம்மதியாக வாழமுடியும். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் நிலங்கள் தொடர்ந்து பறிபோய்க்கொண்டு இருக்குமானால், தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்தார்கள் என்ற பூர்வீகம் இல்லாது போய்விடும். 

இதற்கு நாம் உடந்தையாக இருக்கக் கூடாது. இதனைத் தடுப்பதற்கு அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இதனை சரியான சந்தர்ப்பத்தில் சரியாக சிந்தித்து குறித்த நேரத்தில் செயற்படாது போனால், எமக்கான சிறந்த தீர்வை வெற்றி கொள்ள முடியாது. இதனால் தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு அடக்கு முறையிலான வாழக்கையை அனுபவிக்கும் நிலைமைகள் தேன்றலாம். இதனை தடுக்க வேண்டும். இதேவேளை ஒட்டுமொத்த தமிழர்கள் மிக நீண்ட காலமாக தேடி நிற்கும் அரசியல் தீர்வுத்திட்டம் மிக விரைவில் எட்டப்படக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

 இந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இது எமக்கு கிடைத்திருக்கின்ற கடைசிச் சந்தர்ப்பம். இதனை புத்திசாதுரியமாக நாம் பயன்படுத்தும் நிலையில் இந்த வருடம் அல்லது அடுத்த வருடத்திற்குள் எமக்கான விடிவை பெற்றுக் கொள்ள முடியும். இந்த தீர்வு திட்டத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த தீர்வு திட்டத்தின் அடிப்படையில் தனது தீர்வு திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. 

அதன்படி ஐக்கிய இலங்கைக்குள் பிரிபடாத வடக்கு, கிழக்கு இணைந்த நிலத் தொடர்பிலான ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி அல்லது நிலத் தொடர்வு அற்ற சமஷ்டி முறையிலான ஆட்சி முறையையே நாம் கோரி நிற்கின்றோம்’ என்றார்.

வெளிநாட்டவர் கண்டுபிடித்தால்தான் சாதனை மட்டக்களப்பு மாணவி கண்டு பிடித்தால் வேதனையா? படம்கள் உள்ளே

ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய ஒரு கருவியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி ஜூட் தவசீலன் என்சலேற்றா கண்டு பிடித்துள்ளார்.


 இந்தக் கண்டுபிடிப்புக்காக, அகில இலங்கை ரீதியில் 2015 ஆம் ஆண்டின் புத்தாக்கப் போட்டியில், என்சலேற்றா இரண்டாமிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலையின் தரம் 9 இல் கல்வி கற்கும் என்சலேற்றா, வலயமட்டத்தில் முதல் இடத்தினை பெற்று, தேசிய மட்டத்திற்கு தெரிவாகியிருந்தார். 

அண்மையில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய ரீதியான போட்டியில் 2 ஆம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை அவர் பெற்றுக்கொண்டார்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் உணவு கொள்வனவுக்கு மக்களுக்கு அவதானம்!

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் எழுத்துமூல அனுமதி பெறப்பட்ட உணவகங்களில் உணவுகளை கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களை அவ்வைத்திய அதிகாரி யு.எல்.நசிர்தீன், இன்று திங்கட்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.

 இவ்வாறு அனுமதி பெறப்பட்ட சான்றிதழ்கள் உணவகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில், 'சுகாதார மற்றும் விஞ்ஞான முறைப்படி நோக்குமிடத்து தத்தமது வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளே மிக மிகச் சிறந்ததாக இருப்பதால், வீடுகளில் உணவுகளைச் சமைத்து உட்கொள்ளும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். உணவகங்களில் உணவுகளை கொள்வனவு செய்யும்போது,

 ஏற்கெனவே பயன்படுத்திய சமையல் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவா அல்லது புதிய எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவா என்பதை நிச்சயப்படுத்தவும். அத்துடன், அதிக சுவை ஏற்படுத்தும் இரசாயனப் பொருட்கள் அற்ற உணவாக உள்ளதையும் நிச்சயப்படுத்தவும். மேலும், உணவு உட்கொண்ட பின்னர் ஏதேனும் நோய் அறிகுறி தென்படின் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைகளை நாட வேண்டுமென்பதுடன், உட்கொள்ளப்பட்ட உணவின் எஞ்சிய மாதிரியை பகுப்பாய்வுக்காக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கையளிக்கப்பட வேண்டும்' என்றார்.

1 வருட டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தால் உடனடி வேலை வாய்ப்பு 4 ;5 வருடம் கற்று பட்டம் பெறும் எங்களை உதாசீனம் ! பட்டதாரிகள் சீற்றம்

கொழும்பில் கடந்த 16ஆம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் கலாசாலையிலிருந்து பேரணி ஆரம்பமாகி காந்தி பூங்காவரை சென்றது. இதில் 2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு பின்னர் பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர். இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்துக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சரினால் கடந்த வருடம் உறுதியளிக்கப்பட்டது. 

இருப்பினும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. மேலும், வேலைவாய்ப்புக் கோரி கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கையிலுள்ள திணைக்களங்களில் 32 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படும்போதிலும், அவற்றுக்கு பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான எதுவித நடவடிக்கையும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. 

குறிப்பாக, பட்டதாரிகள் தொடர்பில் எதுவித தேசிய கொள்கையும் புதிய அரசாங்கத்திடம் இல்லை. தேசிய கொள்கையொன்றை வகுப்பதன் மூலம் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை பெறும் சந்தர்ப்பம் ஏற்படும்.

 தேசிய கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறுவோருக்கு உடனடியாக வேலைவாய்ப்பை வழங்கும் அரசாங்கம், மூன்று நான்கு வருடங்கள் கற்று பட்டம் பெறும் எங்களை உதாசீனம் செய்கிறது' என்றனர்.

பலாச்சோலை கிராமத்துக்கு புதிய பஸ் சேவை மக்களை மகிழ்ச்சியில் ஆட்திய கணேசமூர்த்தி ! ( படம்கள்)

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை கிராமத்துக்கு புதிய பஸ் சேவை அண்மையில் ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளரும் அமைச்சின் இணைப்பாளருமாகிய கணேசமூர்தி அவர்களினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.



நீண்டகாலங்களாக படுவான்கரை பிரதேசத்திலுள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்கள்  போக்குவரத்துசெய்வதில் பல இடையூறுகளை எதிர்கொண்டு வந்தனர். பிரதேச மக்களின் வேண்டுதலுக்கு அமைய களுவாஞ்சிகுடியில் இருந்து சின்னவத்தை,காக்காச்சிவட்டை பலாச்சோலை போன்ற கிராமங்களுக்கு இந்த பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டது.