மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி இரண்டாம் குறிச்சி பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதான வீதியை துவிச்சக்கரவண்டியில் கடக்க முயற்சித்தவர் மீது டிப்பர் வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது துவிச்சக்கர வண்டியில் சென்ற காத்தான்குடி இரண்டாம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.எப். ஆதம்லெவ்வை (78) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
