ஊர்காவற்றுறை, நாரந்தனை மத்திப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவு கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நாரந்தனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் அன்ரன் யோகராசா அருள்நிதி (வயது 17) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு, முகம் கழுவுவதற்காகக் கிணற்றடிக்குச் சென்ற மாணவி, கிணற்றடியில் படர்ந்திருந்த பாசி சறுக்கியதால் கிணற்றுக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மாணவியின் சடலம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.