தழிழர்களை கணக்கெடுக்காத அரசுடன் நாம் எதுக்கு கை கோற்க வேண்டும் ? ப. உ யோகேஸ்வரன் சீற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 3,270 பேர் காணாமல் போயுள்ளார்கள்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக அரசாங்கம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார். மட்டக்களப்பு, புலிபாய்ந்தகல் அ.த.க. பாடசாலையின் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது, எமது உறவுகளில் பலர் காணமல் போயுள்ளார்கள். 

அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்காமல் தினமும் வேதனையுடன் வாழ்கின்றனர். 1983ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 1,552 பேர் காணாமல் போயுள்ளார்கள், அவர்களை இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுக்களுமே கடத்திச் சென்றுள்ளதாக அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். 1987இல் இந்திய இராணுவத்தினரால் 165 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

1990 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 1,560 பேர் காணமல் போயுள்ளனர். இவர்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமட அடைந்தவர்களில்; விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை அறியாத நிலையில் அவர்களது உறவினர்கள் அலைந்து திரிகின்றார்கள். யுத்தத்தின் பின்னர் 130 க்கும் மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளார்கள். 

அவர்கள் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது, யார் யார் பலவந்தமாக அழைத்துச் சென்றார்கள் என காணாமல் போனவர்களது உறவினர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். இதுவரை இவ்விடயங்கள் தொடர்பாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விசாரணைகள் மீது எமது உறவுகள் நம்பிக்கை இழந்துள்ளனர்' என்றார்.