கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளரான பெண் கொலைசம்பவம் தொடர்பாக ஒருவர் கைது !

கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளரான பெண் ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதிக்கம்பனியின் உதவி முகாமையாளர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.


இதுபற்றி தெரியவருவதாவது குறித்த கொலை செய்யப்பட்ட பகுதியில் மோட்டார்சைக்கிள் தலைக்கவசம் ஒன்று இருப்பதை கவனித்த பொலிசார் அது தொடர்பாக விசாரணையின் போது அது கொலையாளி பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் தலைக்கவசம் என தெரியவந்ததையடுத்து பொலிசார் குறித்த நிதிக்கம்பனியின் முன்னாள் உதவி முகாமையாளராக கடமையாற்றிய சுடலை வீதி நற்பட்டிமுனையைச் சேர்ந்த 40 வயதுடைய ரி.உதயகுமார் என்பவரை கைது செய்தனர்


இக் கம்பனியில் கடமையாற்றிய முன்னாள் உதவி முகாமையாளரின் ஊழல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் அவரை மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவரின் பதவிக்கு மட்டக்களப்பில் கடமையாற்றிய கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரன் சுலஷனா நியமிக்கப்பட்டு கடமைகளை பெறுப்பேற்று கடந்த 2 வாரங்களுக்கு மேல் கடமையாற்றிவருகின்றார்.


இதனால் ராஜேஸ்வரன் சுலஷனர் மேல் ஏற்பட்ட கோபம் காரணமாக அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சம்பவதினமான சனிக்கிழமை பகல் 2.30 மணிக்கு கம்பனியினுள் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்துடன் உள்நுளைந்து தலைக்கவசத்தை கழற்றிவைத்துவிட்டு அவரின் கழுத்தை வெட்டி கொலை செய்துவிட்டு தலைக்கவசத்தை எடுக்காத நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் கொலக்கு பயன்படுத்திய கத்தியை தப்பி ஓடும்போது வீசியுள்ளதாகவும் அவர் பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்


இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக மேலதிகவிசாரணைகளை கல்முனை பொலிசாரும் விசேட புலனாய்வு பிரிவும் மேற்கொண்டுவருகின்றனர்