தனுஷின் புதிய பட தலைப்பு!

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ரெயிலில் படமாக்கப்பட்ட இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

 இந்நிலையில், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் பரிசீலித்து வருகின்றனர். இதற்காக படக்குழுவினர் தற்போது இரண்டு தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளார்களாம். அதாவது, இந்த படம் ரெயில் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இப்படத்திற்கு ‘ரெயில்’ அல்லது ‘டெல்லி டூ சென்னை’ ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என பரிசீலித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் தலைப்பு உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைத்துள்ளார்.