பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் உடல் துர்நாற்றம் போக அதிக Deodorant பயன்படுத்தியதால் நேர்ந்த துயரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கென்ட் மாகாணத்தில் குடியிருந்து வருபவர் 16 வயதான Thomas Townsend என்பவர்.
இவர் பெரும்பாலும் குளிப்பதை தவிர்த்து வந்துள்ளதாகவும் உடல் துர்நாற்றத்தை களைய deodorant பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இவரது அறையில் முழங்காலிட்ட நிலையில் சரிந்து விழுந்து கிடந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இவரது படுக்கை அறை எங்கும் 42 deodorant கேன்களையும் கண்டெடுத்துள்ளனர்.
தேவைக்கு அதிகமாக தாமஸ் deodorant பயன்படுத்தியதால் அதில் இருக்கும் விஷவாயு தாக்கியே அவர் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குளிப்பதை அறவே தவிர்த்து வந்த தாமஸ் Deodorant பொருட்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளதை அவரது தாயாரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரு மாதத்தில் நான்கு முதல் 5 கேன்கள் வரை பயன்படுத்துவதாக கூறும் அவரது தாய், குதிரைகளுக்கான குளம்புகள் சரி செய்யும் தொழிலை செய்ய விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.