இந்தோனேசியா நாட்டில் மத்திய ஜாவா தீவின் அருகே வீட்டில் தயாரிக்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்த 26 பேர் பலியானதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்றும் செல்மான் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சாராயத்தை விற்றதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டு, அவர் சாராயம் காய்ச்ச வைத்திருந்த ஊறல் அழிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.