மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையில் வாடும் தழிழ் குடும்பங்களை அரசு ஏன் புறக்கனிக்கின்றது !

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஒன்பது குடும்பங்களுக்கு வீடுகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.அமலநாதன் தெரிவித்தார். 

செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு வீடுகளும் ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர்; பிரிவில் இரண்டு வீடுகளும் காத்தான்குடி, கிரான், வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொரு வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஓமான் நாட்டின் நிதியுதவியுடன் ஒவ்வொரு வீடும் 500,000 ரூபாய் பெறுமதியில் சமையல் அறை, படுக்கை அறை, வரவேற்பு அறை ஆகியவற்றைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளன.

 இவ்வாறு இலங்கை பூராகவும் 105 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். காத்தான்குடிப் பிரசேதச செயலாளர் பிரிவில் இவ்வாறு கட்டப்பட்ட வீடொன்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை திறந்துவைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.