மாணவி ஹரிஷ்ணவியின் பாலியல் படு கொலைக்கு முற்று புள்ளி வைக்க ஹர்த்தால் !
வவுனியா மாணவி ஹரிஷ்ணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.நகரில் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்.வணிகர் கழகம், யாழ்.பல்கலைகழகம் உள்ளிட்ட சமூக அமைப்புகள், சிவில் அமைப்புகள் இன்றைய தினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் யாழ்.நகரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்ததுடன், தனியார் போக்குவரத்து பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
இ.போ.ச பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தன, வங்கிகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டன, மேலும் உணவகங்கள், மருந்து கடைகளுக்கு விதிவிலக்களிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான உணவகங்கள், மருந்து கடைகள் திறந்திருந்தன.