மோடியை பாலியல் மிரட்டல் விட்ட பாகிஸ்தான் நடிகை! (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தானை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை காந்தீல் பலோச் என்பவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த தொலைக்காட்சி நடிகை காந்தீல் பலோச், மோடியை கிண்டல் செய்தும், மிரட்டியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 அந்த வீடியோவில், "மோடி, உங்க டீ வியாபாரம் எல்லாம் எப்படி போகிறது. உங்களுக்கு நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அன்பு, ஒற்றுமை ஆகியவற்றை நம்புபவர்கள். இதனால் எங்களுக்கு வெறுப்பு மீது நம்பிக்கை இல்லை. இந்நிலையில் எங்களை கோபப்படுத்தி பார்க்காதீர்கள். பிறகு நாங்களும் கோபப்பட்டால் உங்களால் தாங்க முடியாது. உங்களை எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் விளம்பரம் தேடிக் கொள்ளவே காந்தீல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.