தற்கொலை செய்து கொண்ட இராணுவ சிப்பாய்

முல்லைத்தீவு இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

 ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறிப்பட்ட முறிப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 64 ஆம் படடைபிரிவை சேர்ந்த விமலரட்ன என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரணம் தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.