எங்களுக்கு தாய் மண்னே சொர்க்கம் நாடு திரும்பும் அகதிகள் கூட்டம்!


தமிழகத்தில் செயல்படும் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் 43 பேர் இன்று தாயகம் திரும்ப உள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததையடுத்து இங்கிருந்து அகதிகளாக வெளியேறிய தமிழ் மக்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துடன் இணைந்து இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக தமிழக முகாம்களில் வசிக்கும், 43 இலங்கை தமிழர்கள் இன்று விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். 

நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள 24 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து இவ்வாறு கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளதோடு, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதியில் இவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.