செக்ஸ் பெண்னாக மாறிய ஆண்றியா......

வடசென்னை படத்தின் கதை 35 வருட ரவுடி ஒருவனின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார்.

 வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று வெளியான விசாரணை திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.இந்நிலையில் இவரது அடுத்த படமான வடசென்னை பற்றிய சில தகவல்களை வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார்.இதில் தனுஷ், சமந்தா மற்றும் ஆண்ட்ரியா ஏற்கவிருக்கும் வேடம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்தப் படம் சென்னையில் வசித்த மிகத் தீவிரமான ஒரு ரவுடியின் 35 வருட வாழ்க்கை கதை. இதில் அந்த ரவுடி வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.இதில் சமந்தா, ஆண்ட்ரியா என்று 2 நாயகிகள் நடிக்கின்றனர். 4 வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டது போல இப்படத்தில் ஆண்ட்ரியா விலைமாது வேடத்தில் நடிக்கிறார்.இது அவரின் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய ஒரு வேடமாக இருக்கும்.

 அதே போல இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் சமந்தா இதில் குப்பத்துப் பெண்ணாக நடிக்கிறார்.உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தை 2 பாகங்களாக எடுக்கவும் திட்டமிட்டு இருக்கிறேன். இந்தப் படத்தின் ப்ரீ- புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும்" இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்து இருக்கிறார்.முன்னதாக இப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமானதும் பின்னர் அவருக்குப் பதிலாக தனுஷ் தற்போது நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.