திருகோணமலை புல்மோட்டைப் பகுதியில் பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபர் ஒருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற பதில் நீதிவான் ஹயான் மீ ஹககே வியாழக்கிழமை (11)உத்தரவிட்டார். இந்திவெவ,மகாசேனபுர,பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.கபில ரத்னாயக்க வயது(39)என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாசேனபுர பகுதியில் குறித்த சந்தேக நபரின் வீட்டின் அருகாமையிலுள்ள பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளதாகவும் குறித்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தையெனவும் புல்மோட்டைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் வியாழக்கிழமை (11)காலையில் கைது செய்து குச்சவெளி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை புல்மோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.
கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.