ஒன்றினைந்த எதிர் கட்சிகள் நாளை மீட்டியாகொட, சீனிகம நகரில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பொலிஸ் நிதிக் குற்றத்தடுப்புப் பிரிவின் ஓராண்டு பூர்த்தி நாளை கொண்டாடவுள்ள நிலையில், இதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் தேங்காய் உடைத்து எதிர்ப்பினை வெளிகாட்டவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் அநீதிகளுக்கு எதிராகவும்,தற்போதைய அரசு முன்னெடுத்து வரும் செயல்பாடுகளுக்கான தீர்வினை கடவுளாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கூறியே இந்தத் தேங்காய்கள் உடைக்கவிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்