ஆந்திரா மக்கள் இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் பின்னால் இருக்கிறார்கள் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, ஆந்திரா மக்கள் இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் பின்னால் இருக்கிறார்கள்.
எப்போது தேர்தல் வந்தாலும் அவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கி விடுவார்கள்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களையும், 1 எம்.எல்.சி.யையும் சந்திரபாபு நாயுடு மிரட்டி தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளார்.
கட்சி தாவிய 4 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும்.
பிறரின் முதுகில் குத்துவதில் சந்திரபாபு நாயுடு வல்லவர். ஆரம்பத்தில் என்.டி.ஆரின் முதுகில் குத்தி ஆட்சியை பிடித்தார்.
மேலும், இதுபோல எப்போதுமே அவர் பிறரின் முதுகில் குத்துவார் என பேசியுள்ளார்.