வெல்லம்பிடிய பகுதியில் களனிய கங்கையில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதோடு, இவர்கள் 13 வயதுடைய பாடசாலை மாணவிகள் எனவும் தெரியவந்துள்ளது.