15 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தங்கொடுவ காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் லிஹிரியாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சில காலமாக சிறுமி மற்றும் சந்தேக நபர் இருவரும் காதலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மாரவில நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.