மட்டக்களப்பு,காத்தான்குடி அப்ரார் பிரதேசத்தில் மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில் இயங்கிவரும் அல்உமர் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் நேற்று (05) இலவச சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு, பி.ப 04.30 மணிக்கு, அல்உமர் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. அல்உமர் சனசமூகத் தலைவர் இர்சாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இப்பாடசாலையில் கல்வி கற்கும் 24 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், அல்உமர் சனசமூக நிலையத்தின் பொருளாளரும, சீருடை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான முஹம்மட் நசீர், சீருடை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏனைய சிரேஸ்ட உறுப்பினர்களான முஹ்ஸின், ஆலுஆ சரீப், ஆ நவாஸ், மௌலவி செய்யது அஹமட், அப்துல் காதர், முஹம்மட் லாபிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடியின் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றான அப்ரார் பகுதியில் நீண்டகாலமாக பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் சீருடை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிரதேச மாணவர்களின் நன்மை கருதி சில வருடங்களுக்கு முன்னாள் கல்விமையம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தது. இயங்குவதற்கு இடமில்லாத நிலையில் கைவிடப்படவேண்டிய நிலையில் இருந்த உமர் பாலர்பாடசாலை தொடர்ந்தும் தமது கல்விமையத்தில் இயங்குவதற்கான வசதிகளை NFGG சிலவருடங்களுக்க முன்னர் செய்து கொடுத்திருந்தது.
அண்மையில் இப்பாடசாலைக்குச் சென்று பார்வையிட்ட பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இம்மாணவர்களுக்கான இலவச சீருடையினை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதற்கமைவாகவே இன்று இந்த இலவச சீருடை விநியோகம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.