நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து சிம் காட்களையும் பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ள, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தொலைபேசி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
சிம்காட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகளை தடுக்கும் நோக்குடன் இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.