மேல் மாகாணத்திற்குரிய கல்கமுவ ஜனாதிபதி பாடசாலையில் 2016 ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கான மாணவர்களை சேர்த்துக்கொள்வது தொடர்பாக கடந்த நவம்பர் 20ம் திகதி பாடசாலையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அக்கூட்டத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு 7000 ரூபா பணம்
அறவிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு முன்பாக உள்ள களுதர சில்லறை விற்பனை நிலையத்திற்கு அந்த பணத்தை
செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக பணம் செலுத்த வேண்டிய கடைசி தினமாக கடந்த
27ம் திகதியை குறிப்பிட்டிருந்தனர்.
ஹிரு சி.ஐ.ஏ . இது தொடர்பாக மேற்கொண்ட தேடுதலின் போது ,
குறித்த விற்பனை நிலைய பெண் , அப்பாடசாலையின் அதிபர் அடிக்கடி வந்து பணம் குறித்து
விசாரித்து விட்டு செல்வதாக தெரிவித்திருந்தார்.