
புதுடில்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'மகாபாரதத்தை விட ஒரு சிறந்த ஆசான் இருக்க முடியாது. ஒற்றுமை, நீதி, நேர்மை, நல்லொழுக்கம் மற்றும் அரசியல் தத்துவங்கள் அதில் நிறைய பொதிந்து இருக்கின்றன. நான் கிறிஸ்துவ மிஷனரி பள்ளியில்தான் படித்தேன். எனக்கு ஆங்கிலமும், தாய்மொழியான சிந்தியும் தான் அப்போது தெரியும். எனவே அந்த மொழிகளில் தான் மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதையை படித்தேன். சுதந்திரம் அடைந்த பிறகே அதை என்னால் இந்தியில் படிக்க முடிந்தது.' என்றார்.
கடந்த வாரம் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தேசிய நூலாக, பகவத் கீதையை அறிவித்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்தன. நான் அவரை பாராட்டுகிறேன் என்றார் அத்வானி. அந்த விருதுகளை பத்திரிகையாளர்கள், சமூக தொழிலாளர்கள் மற்றும் பொது நல அதிகாரிகளுக்கெல்லாம் கொடுக்கபட்டுள்ளதாக அவர் கூறினார்.